காவல்துறை மீது பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த நடவடிக்கை: டிஐஜி உத்தரவு

திருப்பதி: காவல் துறை மீது நம்பிக்கையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் டிஐஜி உத்தரவிட்டுள்ளார். திருப்பதி எம்.ஆர்.பள்ளியில் உள்ள காவலர் பயிற்சி மையத்தில் அனந்தபூர் சரக டிஐஜி ரவிபிரகாஷ் மற்றும் மாவட்ட எஸ்பி பரமேஸ்வர் ஆகியோர் நேற்று ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது போலீசார்  ஆயுதங்கள், வெடிகுண்டு தடுப்பு பிரிவு பயன்படுத்திய உபகரணங்கள், நாய் படையின் செயல்பாடு, போலீஸ் வாகனங்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

மோப்ப நாய் வெடிகுண்டு சோதனை மற்றும் வீர சாகசங்கள் நடத்தின. அப்போது, அவர் பேசுகையில், ‘காவல் துறையின் மீது பொதுமக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

முன்னதாக, போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை டிஐஜி மற்றும் எஸ்பி ஏற்று கொண்டனர். அணிவகுப்பின் போது பணியாளர்களின் திறமையை அதிகாரிகள் பாராட்டினர்.  அப்போது, கூடுதல் எஸ்பி சுப்ரஜா உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.

Related Stories: