உலக மிதிவண்டி தின பேரணி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி விஸ்வமஹாவித்யாலயா நிகர்நிலை பல்கலைக்கழகம் சார்பில் உலக மிதிவண்டி தின பேரணி நடத்தப்பட்டது.பேரணியை பல்கலைக்கழக பதிவாளர் ஸ்ரீனிவாசு தலைமை தாங்கி கொடியசைத்து துவங்கி வைத்தார். மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் பேரில் தமிழ்நாடு மாநில நாட்டு நலப்பணி திட்ட இயக்குநகரத்தின் வழிகாட்டுதலில் பேரணி சிறப்பாக நடைபெற்றது. 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர். மிதிவண்டி பயன்பாட்டினால் ஏற்படும் சுற்றுசூழல் பாதுகாப்பு, தனிமனித பொருளாதார மேம்பாடு, நீடித்த மன மற்றும் உடலுறுதி ஆகியவற்றை குறித்து பதிவாளர் சிறப்புரையாற்றினார். பங்கேற்றவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

Related Stories: