புதுக்கோட்டையில் இளைஞரிடம் நூதன மோசடி: வாட்ஸ்ஆப் மூலம் முதலீடு ஆசையை தூண்டி கைவரிசை

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகே உள்ள மேலக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் 38 வயது முகமது மொய்தின். விவசாயியானா இவர் வாட்ஸ்ஆப் எண்ணுக்கு முதலீடு செய்வது தொடர்பான விண்ணப்பம் ஒன்றை மர்ம ஆசாமிகள் அனுப்பி வைத்துள்ளனர். அதனை முகமது மொய்தின் தரவிரக்கம் செய்துள்ளார்.

பின்னர் மொய்தினை வாட்ஸ்ஆப் மூலமாக தொடர்பு கொண்ட மர்ம நபர்கள் முதலீடு செய்தால் அதிகமாக லாபம் ஈட்டலாம் என்று ஆசையை தூண்டி இருக்கின்றனர். போன்பே மூலமாக பல  தவணைகளாக கட்டலாம் என கூறியதின் பேரில் ரூ.1,08,568 கடந்த 6 மாதமாக மொய்தின் அனுப்பி வைத்திருக்கிறார். ஆனால் மோசடி கும்பல் உறுதி அளித்த படி எந்த ஒரு வேலையும் நடக்கவில்லை, அதன் பின்னர் தான் முகமது மொய்தினுக்கு ஏமாந்தது தெரியவந்தது.

இதையடுத்து அவர் புதுக்கோட்டை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முகமது மொய்தின் போலவே ஏராளமானவர்களிடம் மோசடி ஆசாமிகள் பணம் பறித்திருப்பதாக கூறப்படுகிறது. அதன் பின்னணியில் ஒரு கும்பலே இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

எனவே அவர்களை கூண்டோடு பிடிக்க தேவையான நடவடிக்கை எடுத்து வருவதாக சைபர் கிரைம் போலீசார் தெரிவித்துள்ளானர். போலி செயலிகள் மூலம் பணம் பறிக்கும் கைவரிசைகளாக இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். எனவே போலி செயலிகளை நம்பி ஏமாற வேண்டாம் என பொதுமக்களை காவல் துறையினர் எச்சரித்துள்ளனர். 

Related Stories: