நாடு முழுவதும் இளநிலை நீட் தேர்வு: நாளை நடக்கிறது

சென்னை: நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் ஆகிய இளநிலை மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை, ‘நீட்’ நுழைவுத் தேர்வின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. அந்த வகையில், 2024-25ம் கல்வியாண்டுக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வு, நாளை (மே 5) நடக்கிறது. இதற்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு பிப்ரவரி 9ம் தேதி முதல் ஏப்ரல் 10ம் தேதி வரை நடந்தது. தேர்வை, 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள். தமிழகத்தில் ஒன்றரை லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகிறார்கள்.

நாடு முழுவதும் 557 நகரங்களில் தேர்வு பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை (3 மணி 20 நிமிடம்) நடக்கிறது. தமிழ், ஆங்கிலம் உள்பட 13 மொழிகளில் தேர்வு நடைபெறும். இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் பாடங்களில் இருந்து தலா 180 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம் பெறும். தேர்வு பிற்பகல் 2 மணிக்கு தொடங்கும் என்றாலும், மாணவர்கள் மதியம் 1.30 மணிக்குள் தேர்வு மையங்களுக்கு வரவேண்டும். தேர்வு நடைமுறைகள் தொடர்பாக, https://neet.ntaonline.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

 

The post நாடு முழுவதும் இளநிலை நீட் தேர்வு: நாளை நடக்கிறது appeared first on Dinakaran.

Related Stories: