திருமயம் அருகே பில்லமங்கலத்தில் கோயில் திருவிழாவில் மாட்டு வண்டி எல்லை பந்தயம்: வெற்றி பெற்றவருக்கு ரொக்க பரிசு

திருமயம்: திருமயம் அருகே பில்லமங்கலத்தில் கோயில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்க பரிசு வழங்கப்பட்டது. புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள பில்லமங்கலம் பொன்னழகி அம்மன் கோவில் வைகாசி தேர் திருவிழாவை முன்னிட்டு நேற்று மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது . இதில் மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 23 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன.

பந்தயமானது பெரிய மாடு, சிறிய மாடு என இரண்டு பிரிவாக நடைபெற்றது. முதலாவதாக நடைபெற்ற பெரியமாடு பிரிவில் 9 ஜோடி மாடுகள் கலந்து கொண்ட நிலையில் முதல் பரிசை கொத்தரி சீமான் செந்தூர் பாண்டி, 2ம் பரிசு மதகுபட்டி வெள்ளை கண்ணும், 3ம் பரிசு திருமயம் கோட்டை முனீஸ்வரர், 4ம் பரிசு கே புதுப்பட்டி அம்பாள் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றன.

இதனைத் தொடர்ந்து நடைபெற்ற சிறிய மாடு பிரிவில் 14 ஜோடி மாடுகள் கலந்து கொண்டன. இதில் முதல் பரிசு கானாடுகாத்தான் சோலை ஆண்டவர், 2ம் பரிசு சிவகங்கை அருண், 3ம் பரிசு ஈழக்குடிபட்டி பெரியகருப்பன் யாழினி, 4ம் பரிசு நெய்வாசல் அழகப்பன் ஆகியோருக்கு சொந்தமான மாடுகள் வென்றன. பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கு ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது. பந்தயம் நடைபெற்ற திருமயம் - மதுரை பைபாஸ் சாலையில் இருபுறமும் மக்கள் திரண்டிருந்து பந்தயத்தை கண்டு ரசித்தனர்.

Related Stories: