சொத்துகளை முடக்க போலீஸ் நடவடிக்கை நடிகர் விஜய் பாபு போலீசில் சரணடைய முடிவு

திருவனந்தபுரம்: மலையாள புதுமுக நடிகையை பலாத்காரம் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில்  நடிகரும், தயாரிப்பாளருமான விஜய் பாபு போலீசின் பிடியில் சிக்காமல் துபாய்க்கு தப்பி  ஓடினார். விஜய் பாபுவை கைது செய்ய  கொச்சி போலீசார் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டனர். இதற்கிடையே அவர் துபாயில்இருந்து ஜார்ஜியா நாட்டுக்கு தப்பிச் சென்றார். இந்நிலையில் அடுத்தகட் டமாக விஜய் பாபுவின் சொத்துகளை முடக்க போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இதையடுத்து விஜய் பாபு போலீசில் சரணடைய தீர்மானித்துள்ளார்.

நேற்று கேரள உயர் நீதிமன்றத்தில் விஜய் பாபு தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீது விசாரணை நடந்தபோது, குற்றம் சாட்டப்பட்டவர் இந்தியாவில் இருக்கிறாரா என்று நீதிபதி கோபிநாத் கேள்வி எழுப்பினார். விசாரணை தொடங்கும் போது விஜய் பாபு துபாய் சென்றுவிட்டதாகவும், பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டு விட்டதால் இந்தியா திரும்ப முடிய வில்லை என்றும், வாய்ப்பு கிடைத்தால் விசாரணை அதிகாரி முன்னிலையிலோ அல்லது நீதிமன்றத்திலோ ஆஜராக  தயார் என்றும் விஜய் பாபுவின் வழக்கறிஞர் கூறினார்.

இதையடுத்து, குற்றம் சாட்டப்பட்டவர் இந்தியாவுக்கு வரட்டும். பிறகு முன்ஜாமீன் மனு மீது விசாரணை நடத்தலாம் என்று நீதிபதி கூறினார். பிறகு மனு 25ம் தேதிக்கு (இன்று) ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே ஜார்ஜியாவில் இருந்து   விஜய் பாபு துபாய் திரும்பியுள்ளார். இன்று அவர் கேரளா திரும்ப திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டுள்ளதால், துபாயிலுள்ள இந்திய தூதரகத்தின் சிறப்பு அனுமதி இருந்தால் மட்டுமே அவரால்   இந்தியாவுக்கு திரும்ப முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: