கந்தர்வகோட்டை பகுதியில் இறவை சாகுபடியில் எள் அமோக விளைச்சல்

கந்தர்வகோட்டை : புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை பகுதிகளில் எள் சாகுபடி தற்சமயம் நல்லமுறைவயில் நடைபெற்று வருகிறது. இப்பகுதிகளில் பெரும்பாலான விவசாயிகள் மானாவாரி சாகுபடியாக எள் விவசாயம் செய்து வருகிறார்கள். இவ்வாறு சாகுபடி செய்யப்படும் எள் செடி 4 அடி முதல் 5 அடி வரை உயரமாக வளர்வதால் எள் காய்கள் எண்ணிக்கை கூடுதலாக இருக்கிறது.

மானாவாரி சாகுபடி பொருத்தவரை எள் செடி 2 அடி முதல் 3 அடி வரை தான் வளர்ச்சி இருக்கும் என்றும் இறவை பாசன சாகுபடி செய்யும்போது எள் செடி 4 அடி முதல் 5 அடி வரை வளர்கிறது என்றும் இவ்வாறு பாசன முறையில் எள் விவசாயம் செய்யும்போது எள் செடிகளில் அதிகமாக கிளைகள் வெடித்து வளர்வதால் எள் காய்களின் எண்ணிக்கை அதிகமாக கிடைகிறது.ஆகையால் மகசூல் நல்ல முறையில் உள்ளது என்று கூறுகிறார்கள். தற்சமயம் எள் கிலோ ஒன்று 100 முதல் 120 வரை விலை போவதால் நல்ல லாபம் கிடைக்கிறது என்று விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Related Stories: