ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் ஒன்றிணைந்து செயல்படுவோம்: சபாநாயகர் அப்பாவு பேச்சு

சென்னை: தமிழக சட்டப்பேரவை நாகரிகமாக நடக்க காரணமாக இருந்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என்று சபாநாயகர் அப்பாவு கூறினார். சட்டப்பேரவை ஆரோக்கியமாகச் சென்று கொண்டிருப்பதை நேரடி ஒளிபரப்பிலே பார்க்கின்ற பலபேர் அதைப் பற்றிச் சொல்கின்றார்கள். இந்த சபை கடந்த ஓராண்டு காலமாக நாகரிகமாகச் சென்று கொண்டிருக்கிறது. இருந்தாலும், ஒரு நாள் நான் அவர்களை அவையிலிருந்து வெளியேற்றுகின்ற நிலை ஏற்பட்டது. அன்றுகூட, முதல்வர் இருந்திருந்தால் அவ்வாறு நடந்திருக்காது என்பதுதான் என்னுடைய எண்ணம். ‘கனத்த இதயத்தோடு நான் அவர்களை வெளியே அனுப்புகிறேன்’ என்றுதான் சொன்னேன். ஆகவே, இந்த அவை நாகரிகமாக நடந்திருக்கிறது என்றால், அதற்கு முதல் காரணம் முதல்வர் என்றால், மற்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுத்த காரணத்தால்தான்  இந்த சபை நாகரிகமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இந்த ஓராண்டு காலமாக இந்த அவை ஜனநாயக முறைப்படி நடைபெறுகிறது என்று எல்லா பத்திரிகைகளும், ஊடகங்களும், நடுநிலையாளர்களும், எல்லோரும் சொல்கின்ற அளவிற்கு இது இருக்கிறது. முதல்வர் சொன்னதுபோன்று, உண்மையிலேயே ஆளுங்கட்சியும், எதிர்க்கட்சியும் தமிழக மக்களுக்காக ஒன்றிணைந்து நாம் செயல்படுவோம். ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என்றில்லாமல், அனைத்துக் கட்சி உறுப்பினர்கள் மூலமாகவும் இந்த அரசின் நல்ல திட்டங்கள் மக்களைச் சென்றடைய வேண்டும் என்பதுதான் முதல்வரின் எண்ணம். வருங்காலங்களில் பேரவையின் அனைத்து நிகழ்வுகளுமே முழுமையாக ஒளிபரப்பு செய்யும் நிலை நிச்சயமாக வரும்.

Related Stories: