மேலைநாட்டு உணவு வகைகள் அந்நாட்டு தட்பவெப்ப நிலைக்கு பொருந்தும்; ஷவர்மா போன்ற உணவுகளை மக்கள் தவிர்க்க அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள்

சென்னை: ஷவர்மா போன்ற வெளிநாட்டு உணவுகளை உட்கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். ஷவர்மா போன்ற மேலைநாட்டு உணவு வகைகள் அந்நாட்டு தட்பவெப்ப நிலைக்கு பொருந்தும். ஷவர்மா தயாரிப்பதற்கான உயிரியவழிமுறையை பின்பற்றாவிடில் அதை சாப்பிடுவோருக்கு பாதிப்பு ஏற்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சில நாட்களுக்கு முன்பு கேரள மாநிலத்தைச் சேர்ந்த 16 வயது மாணவி சிக்கன் ஷவர்மா சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஷவர்மா சாப்பிட்ட மாணவி சில நாள்களாக உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனை சிகிச்சை பெற்று வந்த நிலையில் எதிர்பாராத விதமாக உயிரிழந்தார். மேலும் ஷவர்மா சாப்பிட்ட மற்ற 50 மாணவர்களுக்கும் உடல்நலக் குறைவு ஏற்பட்டது. கெட்டுப்போன கோழி இறைச்சியில் செய்த ஷவர்மாவால் மாணவி இறந்ததாகக் கூறப்பட்டு வந்த நிலையில் அதில் ஷிகெல்லா பாக்டீரியா  இருப்பது கண்டறியப்பட்டது.

இச்சம்பவத்தையடுத்து ஷவர்மா போன்ற வெளிநாட்டு உணவுகளை உட்கொள்வதை மக்கள் தவிர்க்க வேண்டும் என மக்கள் நல் வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். ஷவர்மா தயாரிப்பதற்கான உயிரியவழிமுறையை பின்பற்றாவிடில் அதை சாப்பிடுவோருக்கு பாதிப்பு ஏற்படுகிறது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதையடுத்து தமிழகத்தில் பல்வேறு ஷவர்மா கடைகளில் சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories: