மின் பற்றாக்குறையை போக்க அஸ்தினாபுரத்தில் துணை மின்நிலையம்: பல்லாவரம் எம்எல்ஏ இ.கருணாநிதி வலியுறுத்தல்

சென்னை: சட்டசபையில் கேள்வி நேரத்தின் போது பல்லாவரம் தொகுதி எம்எல்ஏ இ.கருணாநிதி(திமுக) பேசுகையில்,’பல்லாவரம் தொகுதியில், அஸ்தினாபுரம் பகுதியில் துணை மின் நிலையம் அமைக்க வேண்டும். கோட்ட பொறியாளர் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்றால் தாம்பரம், முடிச்சூர் என்று 6 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டியது உள்ளது. எனவே பல்லாவரத்தில் புதிய கோட்டம் ஒன்றை உருவாக்க வேண்டும்’ என்றார். இதற்கு பதிலளித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பேசுகையில்,’அஸ்தினாபுரம் பகுதியில் ஒரு புதிய மின் நிலையம் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது,

இந்த கிராமத்தில் 0.21.0 ஹெக்டேர் பரப்பளவு உள்ள அரசு களம் புறம்போக்கு நிலம் கண்டறியப்பட்டு முன் நுழைவு அனுமதி பெறப்பட்டுள்ளது. நிலத்தை கையகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலம் கையகப்படுத்தப்பட்டவுடன் தொழில்நுட்ப சாத்திய கூறுகளின் அடிப்படையில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு துணை மின் நிலையம் அமைக்கும் பணிகள் துவங்கப்படும். பல்லாவரத்தில் விரைவில் புதிய கோட்டம் உருவாக்கப்படும்’ என்றார்.

Related Stories: