ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பு: 4,000 கனஅடியாக அதிகரிப்பு

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழையை பொறுத்து, ஒகேனக்கல், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக உள்ளது ஒகேனக்கல் காவிரியில் கடந்த 3 நாட்களாக விநாடிக்கு 2,000 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி 4,000 கனஅடியாக அதிகரித்துள்ளது இதேபோல் மேட்டூர் அணைக்கு நேற்று 1,539 கனஅடியாக இருந்த நீர்வரத்து, இன்று காலை நிலவரப்படி விநாடிக்கு 1,850 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,500 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. அணையின் நீர்மட்டம் 105.50 அடியாக உள்ளது. நீர் இருப்பு 72.15 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் சுற்றுவட்டாரப்பகுதியில் நேற்று 26 மிமீ மழை பதிவாகி உள்ளது.

Related Stories: