தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் முன்சீப் வேதநாயகத்துக்கு மயிலாடுதுறையில் ரூ3 கோடியில் அரங்கம்

மயிலாடுதுறை: l பத்திரிகையாளர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப, பத்திரிகையாளர் ஓய்வூதியம் வழங்கும் திட்டத்தில் 30.7.2018 அன்று நிர்ணயிக்கப்பட்ட பணிக்கொடை மற்றும் பணிக்கால ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ3 லட்சத்தில் இருந்து ரூ4 லட்சமாக உயர்த்தப்படும். l பத்திரிகையாளர் நல நிதியில் இருந்து வழங்கப்படும் மருத்துவ உதவி தொகை 2 லட்சத்தில் இருந்து, 2.50லட்சமாக நடப்பு நிதியாண்டில் உயர்த்தப்படும்.l தமிழில் முதல் நாவல் எழுதிய மாயூரம் முன்சீப் வேதநாயகத்துக்கு மயிலாடுதுறையில் ரூ3 கோடி செலவில் அரங்கம் மற்றும் சிலை அமைக்கப்படும். l தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ள அதியமான் கோட்டம் ரூ1 கோடி மதிப்பீட்டில் புனரமைக்கப்படும். l செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டிலுள்ள மணி மண்டபங்களில் அமர்ந்து போட்டி தேர்வுக்கு தயார் செய்ய ஏதுவாக மாணவர்களின் வசதிக்காக முதற்கட்டமாக 10 மணிமண்டபங்களில் அடிப்படை வசதிகள் ரூபாய் 1 கோடி யில் மேம்படுத்தப்படும்.

l செய்தி மக்கள் தொடர்புத் துறையில் உள்ள சுதந்திர போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகள், தமிழ் அறிஞர்கள் முக்கிய தலைவர்களின் மணிமண்டபங்கள், நினைவகங்கள், அரங்குகள் ஆகியவற்றில் அவர்களின் வாழ்க்கை வரலாறு, ஒளிப்பட தொகுப்புகள், அவர்கள் எழுதிய புத்தகங்கள், அவர்களை பற்றி வெளிவந்துள்ள புத்தகங்கள் அனைத்தும் காட்சிப்படுத்தப்படும். அவர்களை பற்றிய குறும்படங்ஙகள் ஒளிபரப்ப ஏதுவாக முதற்கட்டமாக 15 இடங்களில் எல்இடி டிவி நிறுப்படும். மேலும் 360 டிகிரியில் படம் எடுத்து சமூக ஊடகங்கள் மற்றும் வலைத்தளங்களில் பொதுமக்கள் கண்டு பயனடைந்திடும் வகையில் விரைவுத் துலங்கள் குறியீடு(கியூஆர் கோடு) முறையில் இவற்றை பதிவேற்றம் செய்தல், உள்ளிட்ட பணிகள் ₹2 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும். இவ்வாறு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: