கல்குவாரியில் டிப்பர் லாரி மீது விழுந்த 40 டன் பாறை; கரூர் அருகே பரபரப்பு

கரூர்: கரூர் அருகே 200 அடி ஆழ கல்குவாரியில் 40 டன் எடை கொண்ட பாறை டிப்பர் லாரி மீது சரிந்து விழுந்தது. கருர் மாவட்டம் பரமத்தி சுற்று வட்டாரத்தில் ஏராளமான  கல்குவாரி இயங்கி வருகிறது. கிரசர் மேடு என்ற பகுதியில் இயங்கி வரும் NTC புளு மெட்டல் கல்குவாரியில் தான் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது சுமார் 200 அடி ஆழத்தில் இருந்து கற்களை எற்றி கொண்டு டிப்பர் லாரி ஒன்று மேல ஏறி வந்தது பாதி தூரம் வந்த நிலையில் 40 டன் எடையுள்ள பாறை ஒன்று அந்த லாரி மீது விழுந்தது இதில் டிப்பர் லாரி முழுவதும் நசுங்கியது குவாரியில் கீழே சிக்கிய இரு ஜேசிபி ஓட்டுநர்களை தியணைப்பு வீரர்கள் பத்திரமாக மீட்டனர்.பாறையில் கீழே சிக்கிய லாரி ஓட்டுநரை மீட்க  தியணைப்பு வீரர்கள் போராடி வருகின்றனர். சம்பவ இடத்தில் அரவங்குறிச்சி காவல் துணை கண்காணிப்பாளர் உத்தமசெல்வன் வட்டாச்சியர் உள்ளிட்டோர் முகாமிட்டு மீட்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: