பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 20 கிராமங்களில் முயல்வேட்டை திருவிழா

பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 20க்கும் மேற்பட்ட கிரா மங்களில் முயல் வேட்டைத் திருவிழா. துரத்திப்பிடித்த முயல்களை தோரணம்கட் டித் தொங்கவிட்டு உற்சாக மாக ஊர்வலம் சென்றனர்.பெரம்பலூர் மாவட்டத்தில் ஆண்டு தோறும் தமிழ் வரு டப்பிறப்பான, ஏப்ரல் 14 ம் தேதி முதல் தொடர்ச்சியாக 30க்கும் மேற்பட்ட கிராமங் களில் தொன்று தொட்டு முயல்வேட்டைத் திருவிழா நடந்து வருவதுவழக்கம். இ தற்காக சம்பந்தப்பட்ட கிரா மத்திலிருந்து இளைஞர்க ள், சிறுவர்கள் உள்ளிட்ட ஆண்கள் கூட்டமாக தடிகள் மற்றும் வளர்ப்பு நாய்களு டன் ஊருக்கு அருகேயுள்ள மலையடிவாரப் பகுதி, காடுகள், ஏரிகள், கரடு முரடான மண்மேடுகள், புதர்கள் உள்ளிட்டஇடங்களில் தங்கி யுள்ள முயல்களை துரத்தி அடித்துப் பிடித்து வேட்டை யாடுவார்கள். பின்னர் வேட்டையாடி பிடிப ட்ட முயல்களை ஊருக்குக் கொண்டுவந்து, அதனைத் தோரணமாகக் கட்டித் தொ ங்கவிட்டு மேளதாளத்துடன்ஆடல் பாடல் கும்மாளத்து டன் ஊர்வலமாக ஊரைச்சு ற்றி எடுத்து வருவர். பிறகு சாமிக்குப் படையல் இட்டு, சிறுசிறு துண்டுகளாக பிரித்து சரிசமமாக அனைத்து குடும்பத்தாருக்கும் பங்கிட்டுகொடுத்து சமைத்து சாப்பிடுவது வழக்கம்.

இந்த முயல் வேட்டைக்காக வீட்டுக்கு ஒருவரேனும் தவறாமல் பங்கு பெற அழைப் பு விடுக்கப்பட்டு நூற்றுக்கு மேற்பட்டோர் இந்த முயல் வேட்டையில் பங்குபெறுவ து பாரம்பரிய வழக்கம். இத ன்படி பெரம்பலூர் மாவட்ட த்தில் குரும்பலூர், லாடபுர ம், அம்மாப்பாளையம், கள ரம்பட்டி, சத்திரமனை கீழக் கணவாய், துறைமங்கலம், எளம்பலூர்,சிறுவாச்சூர், அ ரணாரை, செஞ்சேரி,மேலப் புலியூர், நாவலூர், தம்பிரா ன்பட்டி, பாடாலூர்,பாளையம், தெரணி உள்ளிட்ட 20க்கு ம் மேற்பட்ட கிராமங்களில் இந்த முயல்வேட்டைத் திரு விழா நேற்று கோலாகலமா க நடைபெற்றது. இதனால் நேற்றுமாலை பல்வேறு கி ராமங்கள்விழாக்கோலம் பூ ண்டிருந்தது.காவல்துறை, வனத்துறை அனுமதி மறு த்தும் பிரச்சனைகள் ஏதுமி ன்றி முயல் வேட்டைத் திரு விழா நடந்துமுடிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: