வெலிங்டன் ராணுவ கல்லூரியில் பயிற்சி பெற்ற முப்படை அதிகாரிகளுக்கு பட்டமளிப்பு விழா

குன்னூர்: குன்னூர் அருகே வெலிங்டன் ராணுவ கல்லூரியில் பயிற்சி பெற்ற இந்தியா உட்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த முப்படை அதிகாரிகள் 400 பேருக்கு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டனில் ராணுவக் கல்லூரி உள்ளது. இங்கு ராணுவம், விமானப் படை மற்றும் கடற்படை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அத்துடன் காமன்வெல்த் நாடுகள் மற்றும் நட்பு நாடுகளின் ராணுவ அதிகாரிகளுக்கும் இங்கு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கல்லூரியில் பயிற்சி முடித்தவர்களுக்கான 77வது ஆண்டு பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது.

விழாவில் பயிற்சி கல்லூரி தலைவர் லெப்டினென்ட் ஜெனரல் மோகன் தலைமை வகித்தார். இதில் 400 அதிகாரிகளுக்க பட்டம் வழங்கப்பட்டது. முன்னதாக குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த குரூப் கேப்டன் வருண் சிங் கோப்பை, சிறந்த பயிற்சி மாணவராக திகழ்ந்த இரு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது. இதில் வருண் சிங் குடும்பத்தினர் பங்கேற்று கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கினர். தொடர்ந்து இங்கு பயிற்சி பெற்ற பல்வேறு நாடுகளை சேர்ந்த முப்படை அதிகரிகளுக்கு பட்டம் மற்றும் விருதுகளை, லெப்டினென்ட் ஜெனரல் மோகன் வழங்கி பேசினார். இந்தியாவின் முதல் ராணுவ தளபதி மானெக்‌ஷா மற்றும் பல்வேறு உயர்அதிகாரிகளின் நினைவாக பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.

Related Stories: