காற்று மாசுபாட்டினால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள் களையப்பட வேண்டும்-ஆற்காடு எஸ்எஸ்எஸ் கல்லூரியில் கலெக்டர் பேச்சு

ஆற்காடு : ஆற்காடு எஸ்எஸ்எஸ் அறிவியல் மற்றும் கலைக்கல்லூரியில் ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா மற்றும் மாவட்ட சைல்டு லைன் திட்டம் சார்பில் தெருவோர குழந்தைகளுக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு குழந்தைகளின் நல வாழ்வு மற்றும் அவர்களின் உரிமைக்காக குரல் கொடுக்கும் மாபெரும் விழிப்புணர்வு நிகழ்ச்சி மற்றும் பேரணி நேற்று நடந்தது.

இதில் ராணிப்பேட்டை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தலைமை தாங்கி துவக்கி வைத்து பேசியதாவது:பேரிடர் காலங்கள், குடும்ப உறவுகளால் குழந்தைகளை நிராகரித்தலின் மூலம் மன ரீதியாக பாதிப்பு அடையும் குழந்தைகள் உணவு, காசு, உடமைகளுக்காக தெருவோரங்களில் கையேந்தும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். தற்போது பிளாஸ்டிக் நீர் மற்றும் காற்று மாசு பாட்டினால் ஏற்படும் சுகாதார சீர்கேடுகள் களையப்பட வேண்டும். மேற்கண்ட சுகாதார சீர்கேடுகளை சமுதாயத்தில் தனி மனிதனாகவும் சமுதாயம் சேர்ந்தும் களைவதற்கு வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் கல்லூரி அருகிலிருந்து புறப்பட்ட விழிப்புணர்வு பேரணியை கலெக்டர் தொடங்கி வைத்தார். இதில் 250 கல்லூரி மாணவ மாணவிகள் கையில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி கோஷமிட்டவாறு சென்றனர். நிகழ்ச்சியில் எஸ்எஸ்எஸ் கல்லூரி நிறுவனத் தலைவர் ஏ.கே.நடராஜன், நகராட்சி கவுன்சிலர் ஏ.என்.செல்வம், கல்லூரி செயலாளர் ஏ.என்.சங்கர், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா சுகாதார திட்ட பொது மேலாளர் பிரேம் ஆனந்த், கல்லூரி முதல்வர் ராஜலட்சுமி, முதன்மை மேலாளர் செல்வக்குமார், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தேவேந்திரன், நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சாம்ராஜ், கலைக்குழு பயிற்றுநர்கள் செல்வம், குணசேகரன், தவில் வித்வான் ரஜினிகாந்த் மற்றும் சைல்டுலைன் களப்பணியாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: