தனித்திறமைகளிலும் மாணவர்கள் வெற்றிகளை குவிக்க வேண்டும்: அமைச்சர் உதயநிதி எக்ஸ் தள பதிவு

சென்னை: மாணவர்கள் கல்வி, விளையாட்டு உள்ளிட்ட தனித்திறமைகளிலும் கவனம் செலுத்தி வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகிறேன் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் கோடை விடுமுறை முடிந்து நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டன. முதல் நாளே மாணவர்களுக்கான பாட புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இந்நிலையில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பதிவில் வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் கூறியிருப்பதாவது: கோடை விடுமுறை முடிந்து மாணவர்கள் பள்ளி திரும்பும் நாள் இன்று (நேற்று). முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சியில் கல்வியில் முதன்மை மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டிற்கு வலுசேர்க்கும் விதத்தில், மாணவச்செல்வங்கள் கல்வியிலும் விளையாட்டு உள்ளிட்ட தனித்திறமைகளிலும் கவனம் செலுத்தி வெற்றிகளைக் குவிக்க வாழ்த்துகிறேன்.

மாணவச்செல்வங்களுக்கு பெற்றோர்களும் ஆசிரிய பெருமக்களும் உறுதுணையாய் இருந்து கற்றல் சூழலை எளிதாக்கவும் இனிதாக்கவும் வேண்டுகிறேன். இவ்வாறு பதிவில் கூறப்பட்டுள்ளது.

The post தனித்திறமைகளிலும் மாணவர்கள் வெற்றிகளை குவிக்க வேண்டும்: அமைச்சர் உதயநிதி எக்ஸ் தள பதிவு appeared first on Dinakaran.

Related Stories: