நல வாழ்வில் அமிர்தம்

நன்றி குங்குமம் தோழி

இந்தியத் திருநாட்டின் அடையாளம் ஒரு வேத மந்திரத்தில் உள்ளது. நன்மை பயக்க இறைவனிடம் வேண்டிக் கொள்ளும் போது, ‘பாரதர்ஷே. . . பரத கண்டே...ளும் பூத்வீபே’  என்றால், ‘நாவலந்தீவு’ என்று பொருள். அதாவது, நாகம்பழம் என்பது நம் இந்தியத் திருநாட்டின் அடையாளம். சாதாரணமாக சாலையோரம் இருக்கும் மரத்தில் மருத்துவ குணங்கள் எண்ணில் அடங்கா நிறைந்துள்ளது.

* நாவல் மரத்தின் இலை, பூ, பழம், பட்டை, வேர் எல்லாமே கிருமி நாசினிகள்.

* நன்கு உலர்ந்த நாவல் பழக் கொட்டையை இடித்துப் பொடித்து, சூர்ணமாக்கி மோரில் கலந்து குடித்தால்.

நீரிழிவுக்கு மட்டுமல்ல, குடல் புற்று நோயும் வராது.

* நாகமரக் கொழுந்துடன், மாமரக் கொழுந்தையும் அரைத்து அதனை கெட்டியான மோரில் கலந்து குடித்தால் சீத பேதியும் வயிற்றுப் போக்கும் கட்டுப்படும்.

* உப்புண்ணால் ஏற்படும் நரம்பு வீக்கத்திற்கு நாவல்மரப்பட்டையை தண்ணீரில் ஊற வைத்து, மெழுகு போல் அரைத்துப் பூசினால் வீக்கம் வடியும்.

* கொட்டை நீக்கிய நாகப்பழத்துடன் மாம்பழத்தை சேர்த்து சர்க்கரை போடாமல் ஜூஸ் செய்து குடித்தால், நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.

தொகுப்பு: சு.இலக்குமணசுவாமி, திருநகர்.

அட்டைப்படம்: சுஜு வாசன்

Related Stories:

>