அசன்சியான்: பராகுவே நாட்டில் கொட்டித் தீர்த்த கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சாலைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் அடித்து செல்லப்பட்டன. தெற்கு அமெரிக்க நாடான பராகுவேவில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். பராகுவேயில் கடந்த செவ்வாயன்று பெய்ய தொடங்கிய பலத்த மழை இடைவிடாமல் 24 மணி நேரம் கொட்டியது. இதனால் முக்கிய சாலைகள் அனைத்திலும் ஆறுகள் போல வெள்ளம் பாய்ந்து ஓடியது. குறிப்பாக தலைநகர் அசன்சியானை வெள்ளம் சூழ்ந்தது.
