ஆர்எஸ்எஸ், ரா அமைப்புக்கு அமெரிக்காவில் தடை விதிக்க வேண்டும்: அதிபர் டிரம்புக்கு பரிந்துரை

 

நியூயார்க்: சர்வதேச மதச் சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் தனது ஆண்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த அமைப்பானது வெளிநாடுகளின் மத சுதந்திரத்தை கண்காணித்து அமெரிக்க அதிபர், வெளியுறவு செயலர், அந்நாட்டு நாடாளுமன்றத்துக்கு பரிந்துரைகளை அனுப்பி வைக்கும். இந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘இந்தியாவில் கடந்த 2025ம் ஆண்டில் மத சிறுபான்மை சமூகங்களையும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களையும் குறிவைத்து அரசு புதிய சட்டங்களை அறிமுகப்படுத்தி அமல்படுத்தியதன் விளைவாக இந்தியாவில் மதச் சுதந்திர சூழல் தொடர்ந்து மோசமடைந்து வருகின்றது.

மத சுதந்திரம் தொடர்பான கடுமையான மீறல்களுக்கான இந்தியாவின் வெளிநாட்டு உளவு அமைப்பான ரா மற்றும் ஆர்எஸ்எஸ் போன்ற தனிநபர்கள் மற்றும் அமைப்புகள் மீது இலக்கு வைக்கப்பட்ட பொருளாதார தடைகளை விதிக்க வேண்டும். இதன் மூலமாக தனிநபர்கள் அல்லது அமைப்புக்களின் சொத்துக்களை முடக்குவது, அவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதை தடை செய்வது போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Related Stories: