ரமலான் பொருட்களுடன் திரும்பிய போது 2 குழந்தைகளுடன் பாலஸ்தீன தம்பதி பலி: இஸ்ரேல் ராணுவத்துக்கு கடும் கண்டனம்

 

தம்முன்: மேற்கு கரையில் கார் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டனர். கடந்த பிப்ரவரி மாதம் இறுதியில், ஈரான் தொடர்பான எல்லை மோதல்கள் வெடித்தன. இதன் தொடர்ச்சியாக, வடக்கு மேற்கு கரை மற்றும் தம்முன் பகுதிகளில் இஸ்ரேல் ராணுவத்தினர் தொடர் சோதனைகளையும், தீவிர அதிரடி நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்த சூழலில், அப்பகுதியில் அவ்வப்போது மோதல்கள் வெடித்து வந்த நிலையில், ராணுவத்தினரின் நீண்டகால திட்டம் மற்றும் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு இருந்தன.

இந்நிலையில், நேற்று நப்லஸ் நகரில் ரமலான் பண்டிகைக்காக பொருட்கள் வாங்கிவிட்டு கார் மூலம் தம்முன் திரும்பிக் கொண்டிருந்த காலித் பனி ஓடே குடும்பத்தினர் மீது இஸ்ரேல் ராணுவத்தினர் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் தம்பதி மற்றும் அவர்களது இரு குழந்தைகள் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து இஸ்ரேல் போலீசார் மற்றும் ராணுவம் தரப்பில், ‘தீவிரவாதம் தொடர்பான நபர்களை கைது செய்ய சென்றபோது, அந்த கார் எங்களை நோக்கி வேகமாக வந்ததால் தற்காப்பிற்காக சுட்டோம்’ என்று தெரிவிக்கப்பட்டது.

ஆனால், பாலஸ்தீன வெளியுறவு அமைச்சகம் மற்றும் ரெட் கிரசண்ட் அமைப்பினர், ‘எந்த எச்சரிக்கையும் இன்றி ராணுவத்தினர் சுட்டனர். காயமடைந்தவர்களை மீட்க விடாமல் போலீசார் தடுத்தனர்’ என்று குற்றம் சாட்டியுள்ளனர்.

Related Stories: