காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று பள்ளி மேலாண்மை குழு கூட்டம்: கலெக்டர் தகவல்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று, பள்ளி மேலாண்மைக் குழு கூட்டம் நடக்க உள்ளதாக, கலெக்டர் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. அனைத்து அரசு பள்ளிகளின் முன்னேற்றத்துக்காகவும், பள்ளி செயல்பாடுகளை மேலாண்மை செய்வதற்க்காகவும், குழந்தைகளின் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம், 2009ன்படி பள்ளி மேலாண்மை குழு ஏற்படுத்தப்பட்டது.

அரசு வழிகாட்டுதலின் அடிப்படையில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் கீழ் அனைத்து அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், பள்ளி மேலாண்மைக் குழு, பள்ளியின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கிறது. அதன்படி, மேலாண்மைக் குழுவினை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுகட்டமைப்பு செய்வது அவசியம்.

இதைதொடர்ந்து, அனைத்து அரசு பள்ளி மாணவர்களின், பெற்றோர்கள் இடையே பள்ளி மேலாண்மைக்குழு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக இன்று காலை 10 மணிமுதல் 1 மணிவரை பள்ளி அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் முன்னிலையில் கூட்டம் நடத்தப்படுகிறது. இதில் பள்ளி தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மேலாண்மைக்குழு சம்பந்தப்பட்டவர்கள் கலந்து கொள்ள வேண்டும் பள்ளி மாணவர்கள் வர வேண்டிய அவசியம் இல்லை. எனவே இக்கூட்டத்தில் கலந்துகொண்டு கல்வி மேலாண்மை குழு அமைக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: