நரசிங்கபுரம் யோக நரசிம்மர் கோயிலில் 2 கிளைகளுடன் அதிசய தென்னை மரம் : பக்தர்கள் வியப்பு

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே நரசிங்கபுரத்தில் உள்ள யோக நரசிம்மர் கோயில் வளாகத்தில் 2 கிளைகளுடன் உள்ள அதிசய தென்னை மரத்தை பக்தர்கள் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.ராணிப்பேட்டை மாவட்டம், நரசிங்கபுரம் ஊராட்சியில் மிகவும் பிரசித்தி பெற்ற பழமையான யோக நரசிம்மர் கோயில் உள்ளது. இந்த கோயில் வளாகத்தில் 10க்கும் மேற்பட்ட தென்னை மரங்கள் உள்ளன. இதில் ஒரு தென்னை மரத்தில் 2 கிளைகள் உள்ளது.

பொதுவாக தென்னை மரம் நீண்டு வளரும். ஆனால் இந்த தென்னை மரத்தில் அதிசயமாக 2 கிளைகள் உள்ளது. இதனால் தினமும் கோயிலுக்கு வரும் திரளான பக்தர்கள் இந்த அதிசய தென்னை மரத்தை வியப்புடன் பார்த்து செல்கின்றனர். இந்த கோயிலில் நடைபெறும் முக்கிய நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் பங்கேற்கின்றனர். அப்போது இந்த அதிசய தென்னை மரத்தை பார்ப்பதற்காகவே பல்வேறு இடங்களில் இருந்து பக்தர்கள் வந்து செல்வது குறிப்பிடத்தக்கது.

Related Stories: