கூடவே இருந்து குழி பறித்த துரோகிகளை களை எடுங்கள்; லாலாபேட்டையில் அதிமுக போஸ்டரால் பரபரப்பு

கிருஷ்ணராயபுரம்: தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்பு நடைபெற்ற நாடாளுமன்றம், சட்டமன்றம், ஊரக உள்ளாட்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் கட்சி தொண்டர்கள் சோர்வடைந்து உள்ளனர். மேலும், அதிமுகவை மீண்டும் வெற்றிப்பாதைக்கு கொண்டு வர வேண்டுமென கட்சி தொண்டர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில், கரூர் மாவட்டம் குளித்தலை தொகுதி லாலாபேட்டை பகுதியில் அதிமுக மாவட்ட இளைஞர் அணி சார்பில் ஜெயலலிதா படத்துடன் பல்வேறு இடங்களில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளது. அதில், கடந்த சட்டசபை தேர்தலில் குளித்தலை தொகுதியில் கூடவே இருந்து குழி பறித்த துரோகிகளை களை எடுங்கள். களையிழந்த கட்சியை காப்பாற்ற வேண்டும் என அச்சிடப்பட்டுள்ளது. மேலும், இந்த சுவரொட்டி லாலாபேட்டை பஸ்நிலையம், குகை வழிப்பாதை, கடைவீதி, பிள்ளைப்பாளையம் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஒட்டப்பட்டு உள்ளதால் அதிமுகவினர் மத்தியில்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: