இடைக்கோடு பேரூராட்சியில் சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு

அருமனை : இடைக்கோடு பேரூராட்சிக்குட்பட்ட மாலைகோடு பள்ளிக்கூடம் சாலையில் கொட்டப்பட்டு வரும் கழிவுகளை பேரூராட்சி நிர்வாகம் உடனே அகற்ற வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. இடைக்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மாலைகோட்டில் இருந்து குட்டைக்கோடு மற்றும் பனிச்சமூடு நோக்கி செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் தினந்தோறும் ஏராளமான மக்கள் நடந்து செல்கின்றார்கள். வாகனங்களிலும் சென்று வருகிறார்கள்.

இந்த நிலையில் இந்த சாலையின் இரு புறங்களிலும் சமீபகாலமாக மருத்துவக் கழிவுகளை இரவு நேரங்களில் கொட்டி வருகின்றனர். சில நேரங்களில் மூட்டை மூட்டையாக கட்டி அப்பகுதிகளில் கழிவுகளை வீசி செல்கின்றனர். குறிப்பாக மருத்துவ கழிவுகளை அதிகமாக கொட்டும் ஒரு தளமாக இப்பகுதி மாறுகிறது. இதனால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை உள்ளது. இப்பகுதிகளில் மழை காலங்களில் மழை நீர் வடிந்து செல்லும் வாய்க்காலாக கருதப்படும் பகுதியில் தான் பெரும்பாலான குப்பைகள் கொட்டப்பட்டு நீர் செல்லாத வண்ணம் அடைபட்டு இருக்கின்றது.

பேரூராட்சி மன்றத் நிர்வாகம் உடனடியாக இப்பகுதியில் இருக்கும் குப்பைகளை அகற்றுவதோடு அப்பகுதியில் குப்பை கொட்டும் நபர்களை கண்டறிந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

The post இடைக்கோடு பேரூராட்சியில் சாலையோரம் கொட்டப்படும் கழிவுகளால் சுகாதார சீர்கேடு appeared first on Dinakaran.

Related Stories: