ஸ்பாஞ்ச் கேக்

செய்முறை

முட்டையின் வெள்கைக் கருவைத் தனியாக, மஞ்சள் கருவைத் தனியாக எடுத்துக்கொள்ளவும். மஞ்சள் கருவோடு சர்க்கரையைப் பொடிக்காமல் போட்டு, நன்றாகப் பொங்கி வருமளவுக்கு அடித்துக் கொள்ளவும். மைதாவையும் வெள்ளைக் கருவையும் தனியாக அடித்து வைத்துக் கொள்ளவும். பின் இந்த இரண்டு கலவையையும் ஒன்றாகக் கலந்துகொள்ள வேண்டும். இந்தக் கலவையில் வெண்ணெய் சேர்க்காததால் அதிக நேரம் வெளியில் வைத்திருக்காமல் உடனே ஓவனில் வைத்துவிட வேண்டும். இல்லையென்றால் கேக் சாஃப்ட்டாக வராமல், கல் மாதிரி ஆகிவிடும். எனவே கலவையை தயாரிக்கும் முன்பே ஓவனை சூடு செய்து, தயாரான நிலையில் வைத்திருக்க வேண்டும். இந்த கலவையை வெண்ணெய் தடவிய அலுமினிய ட்ரேயில் போட்டு 1200C சூட்டில் ஓவனில் 20 நிமிடங்கள் பேக் செய்யவும்.