திருத்தணி நகராட்சியில் கவுன்சிலர்கள் பதவி ஏற்பு

திருத்தணி: திருத்தணி நகராட்சியில் 25 கவுன்சிலர்கள் பதவி ஏற்றுக்கொண்டனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சியில் உள்ள 21 வார்டுகளில் வெற்றிபெற்ற கவுன்சிலர்கள் பதவி ஏற்பு விழா நேற்று திருத்தணி நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. இதற்காக அனைத்து கவுன்சிலர்களும் வந்து அவரவர் இருக்கையில் அமர்ந்தனர். நகராட்சி ஆணையர் ராமஜெயம், கவுன்சிலர்கள் அனைவருக்கும் பதவிப் பிரமாணம் செய்து வந்தார். இதில் கவுன்சிலர் சரஸ்வதி பூபதி, தீபாரஞ்சனி விநோத்குமார், பிரேமலதா சந்திரன், குமுதா கணேசன்,  லோகநாதன், பிரசாத், அசோக்குமார், நந்தக்குமார், அப்துல்லா, சண்முகவல்லி, நாகராஜ், சாமிராஜ், விஜய்,சத்யா, ரமேஷ் உட்பட 23 கவுன்சிலர்கள் பதவியேற்றனர், திருத்தணி நகராட்சியில் 18 வார்டுகளில் வெற்றிபெற்ற திமுக கவுன்சிலர்கள், 2 வார்டில் வென்ற அதிமுக கவுன்சிலர்கள், ஒரு சுயேச்சை கவுன்சிலர் பதவி ஏற்றுக்கொண்டனர். விழாவில், திருவள்ளூர் மேற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் எம்.பூபதி, எஸ்.சந்திரன் எம்எல்ஏ, நகர பொறுப்பாளர் வினோத்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தேசிய கீதம் இசைக்கப்பட்டது. கவுன்சிலர்கள் அனைவருக்கும் மாலை, சால்வை அணிவித்து தொண்டர்கள் வாழ்த்துக் கூறினர்.

Related Stories: