பொது விநியோகத் திட்டப் பொருட்களை நகர்வு செய்யும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி விரிவான அறிவுரை: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை

சென்னை: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுப்பையன் வெளியிட்ட சுற்றறிக்கையில்: பொது விநியோகத் திட்டப் பொருட்களை நகர்வு செய்யும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகளை பற்றி விரிவாக அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கிலிருந்து தரம் மற்றும் எடை ஆகியவற்றை சரிபார்த்த பின்னரே அத்தியாவசியப் பொருட்கள் லாரியில் ஏற்றப்பட வேண்டும்.

மண்டலங்களில் பொது விநியோகத் திட்டப் பொருட்களை நகர்வு செய்யும் ஒவ்வொரு வாகனத்துடனும் 60 கிலோ எடை சரிபார்க்கக் கூடிய மின்னணு தராசை எடுத்து செல்ல வேண்டும். நியாய விலைக் கடைகளில் பொருட்களை இறக்கும் போது பொருட்கள் மறு எடையிட்டு நியாய விலைக் கடைப் பணியாளர்களிடம் ஒப்புதல் பெறப்படுகிறது என்பதையும் உறுதி செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் தராசுகளை சம்பந்தப்பட்ட முதன்மை சங்கங்களே வழங்க வேண்டும். மேலும் முன்நுகர்வுப் பணிகளை விரைந்து துவங்க வேண்டும் என்பதற்காகவோ அல்லது நகர்வுப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்பதற்காகவோ சுற்றறிக்கைகள் மற்றும் கடிதத்தில் வழங்கப்பட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றாது இருத்தல் கூடாது என்றார். இதுதொடர்பாக கடந்த 11ம் தேதி தினகரன் நாளிதழில் வெளியான செய்தியை தொடர்ந்து இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

The post பொது விநியோகத் திட்டப் பொருட்களை நகர்வு செய்யும் போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் பற்றி விரிவான அறிவுரை: கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் சுற்றறிக்கை appeared first on Dinakaran.

Related Stories: