இன்ஸ்பெக்டருடன் உல்லாசம் பெண் எஸ்ஐ அதிரடி டிரான்ஸ்பர்

நெல்லை: இன்ஸ்பெக் டருடன் உல்லாசமாக இருந்த பெண் எஸ்ஐ அதிரடி டிரான்ஸ்பர் செய்யப்பட்டுள் ளார். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் உட்கோட்டத்தில் சங்கரன்கோவில் அருகே ஒரு காவல் நிலையத்தில் கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த ஒருவர் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்து வருகிறார். அருகில் உள்ள தாலுகா தலைநகர் காவல் நிலையத்தில் ஆலங்குளம் வட்டாரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் எஸ்ஐயாக உள்ளார். அந்த பெண் எஸ்ஐக்கு திருமணமாகி, குழந்தைகள் உள்ளனர்.

அதேபோல் இன்ஸ்பெக்டருக்கும் மனைவி, குழந்தைகள் உள்ளனர். பல்வேறு புகாரால் பெண் எஸ்ஐ ஏற்கனவே நெல்லை மாநகர காவல்துறையில் இருந்து மாவட்டத்திற்கு இடமாறுதல் வாங்கிச் சென்றார். பின்னர் தென்காசி மாவட்ட காவல்துறைக்கு பணியிட மாறுதல் வாங்கிச் சென்றார். இதேபோல் இன்ஸ்பெக்டர் மீதும் பல்வேறு புகார்களின் அடிப்படையில் தென்காசி மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் தான் இருவரும் அடுத்தடுத்த காவல்நிலையத்தில் பணிபுரிவதாலும், அந்த இன்ஸ்பெக்டர் மேலதிகாரி என்பதாலும் அடிக்கடி பெண் எஸ்ஐ வழக்கு சம்பந்தமாக அவரை பார்க்கச் செல்வதாக கூறிச் சென்றுள்ளார். மதியவேளையில் இன்ஸ்பெக்டரின் குடியிருப்புக்கு செல்லும் எஸ்ஐ மாலையில் தான் அவர் பணிபுரியும் காவல் நிலையத்திற்கு திரும்பி வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.

இதன் பின்னர் இன்ஸ்பெக்டரும் இரவு ரோந்துக்கு செல்வதாக கூறி காவலர் குடியிருப்பில் உள்ள பெண் எஸ்ஐ வீட்டிற்கு சென்று வந்துள்ளார். ஒரு கட்டத்தில் இவர்களின் ஆட்டம் உச்ச கட்டத்திற்கு போனதால் அப்பட்டமாக வெளியில் தெரிந்துள்ளது. இந்த விஷயம் காவல்துறை உயரதிகாரிகளுக்கும் உளவுத்துறை மூலம் ரிப்போர்ட்டாக பறந்தது. இதனால் சம்பந்தப்பட்ட பெண் எஸ்ஐ மட்டும் மாவட்ட எல்லையில் உள்ள வேறு ஒரு காவல்நிலையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

The post இன்ஸ்பெக்டருடன் உல்லாசம் பெண் எஸ்ஐ அதிரடி டிரான்ஸ்பர் appeared first on Dinakaran.

Related Stories: