ரெயின்போ கப் கேக்

செய்முறை

ஒரு பாத்திரத்தில் வெண்ணெயையும், சர்க்கரையையும் எலெக்ட்ரிக் பீட்டர் கொண்டு நன்கு அடிக்கவும். பின் அதில் முட்டை, வெனிலா எசென்ஸ் சேர்த்து அடிக்கவும்.பின் அதில் கோதுமை மாவு, உப்பு, பேக்கிங் பவுடர் போட்டு பால் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி ஹேண்ட் பீட்டர் கொண்டு நன்கு கலக்கவும்.இந்த கலவையை நான்காக பிரித்து நான்கு கலர்களையும் சேர்த்து வைக்கவும். பின் கப்பில் (பேப்பர் கப்) 4 கலர் கேக் கலவையை சேர்த்து அவனில் 15-20 நிமிடங்கள் 150 C யில் பேக் செய்யவும். ஆறிய பின் அதன்மேல் பட்டர் கிரீம் அல்லது விப்பிங் கிரீம் போட்டு அதன்மேல் கலர் sprinkles தூவி அலங்கரிக்கவும்.