சென்னை மாநகராட்சி 99வது வார்டில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி தோல்வி: முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதி மகனிடம் வீழ்ந்தார்

சென்னை: சென்னை மாநகராட்சி 99வது வார்டில் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சிவகாமி தோல்வியடைந்தார். அவரை முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதியின் மகன் பரிதி இளம் சுருதி வீழ்த்தினார். சென்னை மாநகராட்சி 99வது வார்டில் திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பரிதி இளம் வழுதி மகன் பரிதி இளம் சுருதி போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சமூக சமத்துவ படை கட்சியின் தலைவரும், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியுமான சிவகாமி களமிறக்கப்பட்டார்.

இதில் பரிதி இளம் சுருதி சுமார் 4000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். சிவகாமி தோல்வியடைந்தார். இதில் சிவகாமி 2வது சுற்றிலேயே தோல்வியை சந்திக்க நேரிட்டது. இவர் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டார். சென்னையில் அதிமுக பல இடங்களில் போட்டியிட்டாலும் களத்தில் போட்டியே இல்லாத நிலைதான் இருந்தது. ஆனாலும் சிவகாமிதான் மேயர் வேட்பாளர் என்றெல்லாம் பேச ஆரம்பித்தனர். ஆனால் 2வது சுற்றிலேயே அவர் வீழ்த்தப்பட்டார்.

Related Stories: