பேரூராட்சியில் போட்டியிட தேமுதிகவில் ஆள் இல்லையாம்

கலவை: கடந்த 2011ம் ஆண்டு நடந்த நகர்ப்புற தேர்தலில் திமிரி பேரூராட்சியில் தேமுதிக 2 வார்டு கவுன்சிலர்கள் வெற்றி பெற்றனர். ஆனால் தற்போது நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், கலவை பேரூராட்சியில் ஒரே ஒரு வார்டில் மட்டுமே  போட்டியிடுகிறது. ஆனால் திமிரி பேரூராட்சியில் வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு  ஒருவரைக்கூட நிறுத்த முடியாத பரிதாப நிலைக்கு தேமுதிக தள்ளப்பட்டுள்ளது. இதுகுறித்து தேமுதிக நிர்வாகிகள் கூறுகையில், ‘‘விஜயகாந்த் ஒருவருக்காக தங்கள் உயிரையும் கொடுப்போம். தேமுதிக விஜயகாந்தால் தான் உருவானது. தற்போது, கட்சியின் தலைமை தொண்டர்கள் மீது, அக்கறை இல்லாமல் இருப்பது எங்களுக்கு வேதனையாக உள்ளது’’ என்று புலம்பி வருகின்றனர்.

Related Stories: