கோவில்பட்டி: கோவில்பட்டியில் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் அளித்த பேட்டி: நெல்லையில் பொருநை அருங்காட்சியகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளது மிக்க மகிழ்ச்சி. இதை ஒன்றிய அரசு மூடி மறைக்க பார்க்கிறது. அது நல்ல முறை அல்ல. திமுக கூட்டணி தான் தமிழகத்தில் வெல்லும். தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்களும் இதற்கு ஒரு காரணம்.
தமிழக மக்கள் எப்போதும் பிரிவினை கருத்துக்களை ஏற்க மாட்டார்கள். ஆனால் இன்றைக்கு பாஜ, ஆர்எஸ்எஸ் ஒரு பதற்ற அரசியலை முன்மொழிகின்றனர். அதற்கு திருப்பரங்குன்றம் ஒரு சான்று. திமுக ஜனநாயக சக்தி. ஜாதியால் மதங்களால் மக்களை யார் பிளவுபடுத்துகிறார்களோ அவர்கள் தான் தீய சக்தி. நடிகர் விஜய் அரசியலில் முதல் அடி எடுத்து வைத்திருக்கிறார். அவர் படிக்க வேண்டிய பாடங்களும் பெறவேண்டிய அனுபவங்களும் நிறைய இருக்கிறது என்பதை அவரது வார்த்தைகள் தெளிவுபடுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.
