செங்கோட்டையன் அமைச்சராக இருந்தபோதுதான் இடைநிற்றல் அதிகம் ழைய செய்திகளை படித்துவிட்டு அப்டேட் தெரியாம பேசாதீங்க விஜய்: அமைச்சர் அன்பில் மகேஷ் ‘பளார்’

திருச்சி: செங்கோட்டையன் அமைச்சராக இருந்தபோதுதான் பள்ளி இடைநிற்றல் அதிகம். பழைய செய்திகளை படித்துவிட்டு அப்டேட் தெரியாமல் விஜய் பேசுகிறார் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பதிலடி கொடுத்து உள்ளார்.
திருச்சியில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் பள்ளி இடைநிற்றல் அதிகரித்துள்ளது என தவெக தலைவர் விஜய் கூறுவது வருத்தமளிக்கிறது.அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் 2017-18ம் ஆண்டில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் (தற்போதைய தவெக நிர்வாகி) காலத்தில் தான் இடைநிற்றல் 16 சதவீதமாக இருந்தது. தற்போது, அது 7.7 சதவீதமாக குறைந்து உள்ளது. இந்த தகவல் கடந்த 4 மாதங்களுக்கு முன்பு வந்த செய்தி. அப்போதே அதற்கான விளக்கமும் அளிக்கப்பட்டு உள்ளது. பழைய செய்திகளை படித்துவிட்டு விஜய் குற்றச்சாட்டு வைக்கிறார். குற்றச்சாட்டு வைக்கும் முன் விஜய் அப்டேட் ஆக வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: