97.37 லட்சம் பேர் நீக்கம் பொதுமக்களுக்கு பிரேமலதா வேண்டுகோள்

சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா வெளியிட்ட அறிக்கை: எஸ்ஐஆர் வரைவு பட்டியலில் தமிழ்நாட்டில் 97 லட்சத்து 37 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். இந்த நீக்கங்கள் அனைத்தும் விதிமுறைகளுக்கு உட்பட்டு, உண்மையின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்வது பொதுமக்களின் முக்கியமான பொறுப்பாகும். ஜனவரி 18ம் தேதி வரைஅவகாசம் உள்ளது. இந்த முகாம்களில் பொதுமக்கள் நேரில் சென்று, தவறுதலாக நீக்கப்பட்ட வாக்காளர்களின் பெயர்களை மீண்டும் சேர்த்துக்கொள்ள தேவையான விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். ஒவ்வொரு தனிநபரும், அவர்களின் குடும்பத்தினரும் தங்களின் வாக்குரிமையை பாதுகாக்க விழிப்புடன் செயல்பட வேண்டியது மிக முக்கியமானதாகும். வாக்காளர் பட்டியலை ஆய்வு செய்வதும், தவறுகளை திருத்திக் கொள்வதும் நமது ஓட்டுரிமை நமது ஜனநாயக கடமை.

Related Stories: