டிடிவி.தினகரனுக்கு மிரட்டலா..? தை பிறந்தால் வழி பிறக்கும் என மழுப்பல்

தேவகோட்டை: சிவகங்கை மாவட்டம், தேவகோட்டையில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி.தினகரன் நேற்று அளித்த பேட்டி:
கூட்டணிக்கு தலைமை தாங்குகின்ற கட்சிகள் எங்களிடம் அன்போடு, மரியாதையோடு அணுகி கூட்டணிக்கு வரவேண்டும் என்று பேசி வருகிறார்கள். நாங்கள் எங்காவது போய் வந்தால் உடனே மிரட்டுகிறார்கள் எனச் சொல்வதா? அமமுகவும் சரி, டிடிவி.தினகரனும் சரி, எத்தனையோ சோதனைகளை கடந்து வந்திருக்கிறோம்.
எங்களை யாரும் மிரட்ட முடியாது. அதிமுக உடன் இணைகிறோம் என்றால், அந்தக்கட்சியுடன் ஒன்றிணைவது இல்லை. கூட்டணியில் இருப்பது.

கூட்டணி குறித்து பலமுறை கூறியுள்ளேன். பிப்ரவரி மாதம் கட்சி நிர்வாகிகள், தொண்டர்களின் கருத்துக்களுக்கு ஏற்ப கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியாகும். தலைமை முடிவெடுத்துவிட்டு, அதை தொண்டர்கள் மீது திணிக்கும் கட்சி அல்ல நாங்கள். எத்தனையோ அரசியல் ஜாம்பவான்கள் எல்லாம் சுயநலத்திற்காக வெளியேறிய பிறகும், உயிரோட்டத்தோடு தமிழ்நாடு முழுவதும் இருக்கிறது இந்த இயக்கம். 2026 சட்டசபை தேர்தலில் அமமுகவை தவிர்த்து விட்டு எந்த கட்சியும் ஆட்சியில் அமர முடியாது. தை பிறந்தால் வழி பிறக்கும். ஜெயலலிதா பிறந்தநாளுக்குப் பிறகு எங்கள் கூட்டணி நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படையாக அறிவிப்போம். இவ்வாறு கூறினார்.

Related Stories: