களறி பயிற்சி அகாடமிக்கு வித்யுத் ஜம்வால் ரூ.5 லட்சம் வழங்கினார்

சென்னை: களறி பயிற்சி அகாடமிக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளார், பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால். அஜித் நடித்த பில்லா 2, விஜய் நடித்த துப்பாக்கி படங்களில் வில்லனாக நடித்தவர் வித்யுத் ஜம்வால். இந்தியில் ஹீரோவாக நடித்து வருகிறார். கேரளாவிலுள்ள எகவீரா களறிபயட்டு அகாடமிக்கு வித்யுத் ஜம்வால் ரூ.5 லட்சம் நிதி வழங்கியுள்ளார். இந்த அகாடமியில் மாணவர்கள் பலருக்கு களறி சண்டைப் பயிற்சி வழங்கப்படுகிறது. இதுகுறித்து வித்யுத் ஜம்வால் கூறும்போது, ‘தற்காப்புக் கலை நமக்கு அவசியமானது. இதை ஊக்குவிக்கும் விதமாக என்னால் முடிந்த உதவியை செய்திருக்கிறேன். இங்கு பயிலும் மாணவர்களுக்கு உதவியாக இருப்பேன்’  என்றார்.

Related Stories: