சென்னை பெருநகர காவல்துறை உருவாக்கிய விடுப்பு செயலியை அறிமுகம் செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: சென்னை பெருநகர காவல்துறையால் உருவாக்கப்பட்ட விடுப்பு செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து CLAPP செயலியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். காவலர்கள் வார விடுமுறை மற்றும் இதர விடுமுறை தர அனுமதி கோரி செயலியில் விண்ணப்பிக்கலாம். காவல்துறை தங்களது விடுப்புகளுக்கான அனுமதியை வீடுகளில் இருந்தே இந்த செயலி மூலம் பெறலாம். இந்த செயலி மூலம் 2ம் நிலை முதல் தலைமைக்காவலர் வரையிலான காவலர்களுக்கு வாரத்தில் ஒருநாள் ஓய்வு தர நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது.

Related Stories: