தொற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டிருந்தாலும் மக்கள் மருத்துவமனைக்கு வருவது குறைவாக தான் உள்ளது: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

சென்னை: புதிதாக தொடங்கப்பட்டுள்ள ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான மருத்துவ இடங்கள் சேர்க்கை இந்த ஆண்டு தொடங்கும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டியளித்தார்.  4 நாட்களில் அதற்கான ஆணை வரும் எனவும் கூறினார். சென்னை கிண்டி கிங் இன்ஸ்டிடியூட் வளாகத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் முன் களப்பணியாளர்களுடன் நடைபெற்ற சமத்துவ பொங்கல் விழாவில் அமைச்சர் பங்கேற்றார். இரண்டு தனியார் பள்ளி மாணவிகள் பணம் சேர்த்து ஆனந்தம் அறக்கட்டளையுடன் இணைந்து 25 அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் கல்விக்கு உதவியாக ஆன்டிரோய்டு கைப்பேசி வழங்கியுள்ளனர் என கூறினார்.

கிங் இன்ஸ்டிடியூட் மருத்துவமனையில் 230 கொரோனா நோயாளிகள் உள்ளனர் என கூறினார். வீட்டில் தனிமைப்படுத்தி உள்ளவர்கள் அவர்களின் இல்லங்களில் வசதி இல்லையென்றால் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். அவ்வாறு வருபவர்கள் மட்டும்தான் இன்று சிசிசி எனபடுகின்ற கொரோனா கேர் சென்டரில் அனுமதிக்கப்படுகிறார்கள். தொடர் காய்ச்சல், தொண்டை வலி, மூச்சுதிணறல், நுறையீரல் பிரச்சனை உள்ளவர்கள் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். தொற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டிருந்தாலும் மக்கள் மருத்துவமனைக்கு வருவது குறைவாக தான் உள்ளது என கூறினார். நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதை பற்றி நேற்று நடந்த நிகழ்ச்சியில் ஒன்றிய பிரதமரிடம் தமிழக முதல்வர் வலியுறுத்தியுள்ளார் என பேட்டியளித்தார்.

Related Stories: