பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிராம ஊராட்சிகளில் சிறப்புப் பணிகள்: கலெக்டர் அறிவிப்பு

காஞ்சிபுரம்: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கிராம ஊராட்சிகளில் சிறப்பு பணிகள் மேற்கொள்ளுமாறு அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கும், கலெக்டர் ஆர்த்தி கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள கிராம ஊராட்சி பகுதிகளில் இந்தாண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஊராட்சி ஒன்றிய கட்டிடங்கள் மற்றும் கிராம ஊராட்சி மன்ற கட்டிடங்களுக்கு வண்ணம் பூசுதல், ஊராட்சி மன்ற கட்டிடங்கள், ஊராட்சி ஒன்றிய கட்டிடங்களை தூய்மைப்படுத்துதல், கிராம ஊராட்சிகள் தோறும் வேம்பு, புங்கன், மா, கொய்யா ஆகிய பலன் தரும் 100 மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மேலும் கிராம ஊராட்சிகள் தோறும் ஓமிக்ரான் பரவலை தடுக்கும் பொருட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து உள்ளாட்சி பிரதிநிதிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என கூறப்பட்டுள்ளது.

Related Stories: