கோடைகாலத்தில் தர்பூசணி ஏன் சாப்பிடணும்?

நன்றி குங்குமம் தோழி

Advertising
Advertising

* கோடைகாலத்தில் நீர்ச்சத்துள்ள தர்பூசணி பழங்களை அதிகம் சாப்பிடுவதால் சிறுநீரகங்கள் சிறப்பாக செயலாற்றுவதோடு, சிறுநீர் பைகளில் மூத்திர அடைப்பு, நீர் சுருக்கு போன்ற நோய்கள் ஏற்படுவதை தடுக்கும். சிறுநீரில் உடலின் நச்சுகள் அனைத்தும் வெளியேற்றச் செய்யும்.

* வெயில் காரணமாக உடலின் நீர் வியர்வையாக வெளியேறி விடுவதால் ரத்தத்தில் நீர்ச்சத்து குறைந்து ரத்த ஓட்டத்தின் வேகம் குறைகிறது. இந்த நேரத்தில் தர்பூசணி பழங்கள் ரத்தத்தில் நீர் சத்தினை சேர்த்து, அதன் ஓட்டம் சீராகி உடலுக்கு புத்துணர்ச்சியைத் தரும்.

* கோடையில் தர்பூசணி சாப்பிடுவதால் உடல் குளிர்ச்சி அடைந்து, உடற்சோர்வை நீக்குகிறது.

* தர்பூசணியில் நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் பிரச்னை தீருகிறது.

* ஊட்டச்சத்து நமது உடல்நிலை சிறப்பாக இருக்கவும், அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கவும் உடலுக்கு தாதுக்கள், இரும்புச்சத்து, வைட்டமின் சத்து, சுண்ணாம்புச்சத்து, பாஸ்பரஸ், கால்சியம் சத்துக்கள் போன்றவை அத்தியாவசிய தேவையாகும். இவை அனைத்தும் அவ்வப்போது நாம் தர்பூசணி பழங்கள் சாப்பிடுவதால் நமக்கு கிடைக்கின்றன.

* தர்பூசணிபழங்களில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. இதை சாப்பிடும் நபர்களுக்கு ரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து, இதயம் சம்பந்தமான நோய்கள், பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கிறது. உடல் எடை குறைய தர்பூசணி பழம் உதவுகிறது.

தொகுப்பு: கவிதா

படங்கள்: சரவணன், திருச்சி.

Related Stories: