ஆஸ்திரேலிய ஓபன்: டொமினிக் தீம் விலகல்

கிராண்ட்ஸ்லாம் தொடரில் ஒன்றான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடர் வரும் 17ம் தேதி முதல் 30ம் தேதி வரை மெல்போர்னில் நடைபெற உள்ளது.  இந்த தொடரில் இருந்து ஆஸ்திரிய டென்னிஸ் வீரர் டொமினிக் தீம் விலகி உள்ளார். 28 வயதான அவர் கை மணிக்கட்டில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகுவதாக தெரிவித்துள்ளார்.இந்த ஆண்டு நடைபெற உள்ள ஆஸ்திரேலிய ஓபன் தொடரை நான் மிஸ் செய்கிறேன்.

நான் அதிகம் நேசிக்கும் நகரம் மற்றும் அந்த நகரத்தின் மக்களுக்கு மத்தியில் என்னால் விளையாட முடியாமல் போனது துரதிர்ஷ்டவசம். ஆனால் வரும் 2023 ஆஸ்திரேலிய ஓபன் தொடரில் நான் பங்கேற்பேன். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துகள்” என தீம் தெரிவித்துள்ளார்.

Related Stories: