அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அறிவிப்பு

கான்பெர்ரா: அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் அறிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணியின் மூத்த தொடக்க ஆட்டக்காரர் டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றுள்ளார். டி20 உலகக் கோப்பை 2024 தொடங்குவதற்கு முன்பு, நட்சத்திர கிரிக்கெட் வீரர் தனது வாழ்க்கை குறித்து ஒரு பெரிய அறிக்கையை அளித்திருந்தார்.

தற்போது நடைபெற்று வரும் இந்தப் போட்டி தனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசிப் போட்டியாக இருக்கலாம் என்று அவர் தெரிவித்திருந்தார். தற்போது ஆஸ்திரேலிய அணி அரையிறுதிப் போட்டியிலிருந்து வெளியேறிய நிலையில், வார்னர் சர்வதேச போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார்.

இதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் வார்னரின் பழைய புகைப்படங்கள் குவிந்த வண்ணம் உள்ளன. வார்னரின் ஓய்வு குறித்து கிரிக்கெட் அவரின் ரசிகர்கள் ஏமாற்றம் கவலையடைந்துள்ளனர். இருப்பினும், அணிக்கு தனது சேவை தேவைப்பட்டால், கண்டிப்பாக சேவை செய்ய வருவேன் என்று வார்னர் தெளிவாக தெரிவித்துள்ளார்.

டேவிட் வார்னர் சர்வதேச அளவில் ஆஸ்திரேலியாவுக்காக மொத்தம் 18995 ரன்கள் குவித்துள்ளார். பந்துவீச்சில் 19 டெஸ்ட் கிரிக்கெட்டில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டியின் ஒரு இன்னிங்ஸிலும் பந்துவீசிய அவர் விக்கெட் எதுவும் வீழ்த்தவில்லை.

The post அனைத்து விதமான சர்வதேச போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறுவதாக ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: