டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இறுதி போட்டிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா அணி

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் அரை இறுதியில் ஆப்கானிஸ்தான் அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென் ஆப்பிரிக்கா அணி. முதலில் பேட் செய்த ஆப்கானிஸ்தான் அணி 56 ரன்னில் சுருண்டது. 11.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 56 ரன் மட்டுமே எடுத்தது. 57 ரன் இலக்குடன் ஆடிய தென் ஆப்பிரிக்க அணி எளிதாக வெற்றிபெற்றது.

ஐசிசி உலக கோப்பை டி20 தொடரின் அரையிறுதி ஆட்டங்களில் இன்று காலை தென் ஆப்ரிக்கா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் இணைந்து நடத்தும் 9வது ஐசிசி டி20 உலக கோப்பை தொடர் பரபரப்பான இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. லீக் சுற்று, சூப்பர்-8 சுற்றின் முடிவில் இந்தியா, இங்கிலாந்து, தென் ஆப்ரிக்கா, ஆப்கான் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறி உள்ளன.
முதல் அரையிறுதி: அனைத்து உலக கோப்பையிலும் விளையாடி உள்ள தென் ஆப்ரிக்கா 3வது முறையாக பைனலுக்கு முன்னேற வேண்டும் என்ற முனைப்புடன் அரையிறுதி போட்டியை தொடங்கியது.

இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆப்கானிஸ்தான் அணி 11.5 ஓவரில் 56 ரன் மட்டுமே எடுத்தது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனை அடுத்து களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 8.5 ஓவரில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 60 ரன்களை எடுத்து இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

The post டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இறுதி போட்டிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா அணி appeared first on Dinakaran.

Related Stories: