ரோஹித் ஷர்மாவுக்கு தனது வரம்புகள் தெரியும், அந்த வரம்புகளுக்குள், அவரை விட சிறந்த வீரர் இல்லை: கபில் தேவ்

டெல்லி: ரோஹித் ஷர்மாவுக்கு தனது வரம்புகள் தெரியும், அந்த வரம்புகளுக்குள், அவரை விட சிறந்த வீரர் இல்லை என இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.

டி20 உலகக் கோப்பை சூப்பர் 8 சுற்றில் 41 பந்துகளில் 92 ரன்கள் விளாசுவதன் மூலம் இந்தியாவை ரோஹித் அரையிறுதிக்கு கொண்டு சென்றார். சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 24 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிக்கு ரோஹித்தின் ஆட்டம் அடித்தளம் அமைத்தது.

ரோஹித்தை விராட் கோலியுடன் ஒப்பிட்டுப் பேசிய கபில் தேவ், ஆக்ரோஷமாக செயல்படும் கோலியைப் போல கேப்டன் தனது ஆக்ரோஷத்தைக் காட்டவில்லை என்று கூறினார். “அவர் விராட் போல் விளையாடுவதில்லை, விராட் போல் குதிக்க மாட்டார்.

ஆனால் அவருக்கு தனது வரம்புகள் தெரியும், அந்த வரம்புகளுக்குள், அவரை விட சிறந்த வீரர் இல்லை” என்று கபில் கூறினார். மேலும் தனக்காக விளையாடிய பல சிறந்த வீரர்களைப் போல் அவர் இல்லை என்று ரோஹித் ஷர்மாவின் தலைமை மற்றும் பேட்டிங்கிற்கு சிறப்புப் பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளார்.

மேலும் “பல பெரிய வீரர்கள் வருகிறார்கள், அவர்கள் தங்கள் சொந்த வாழ்க்கையைப் பற்றி கவலைப்படுகிறார்கள், அந்தக் கண்ணோட்டத்தில் கேப்டன்ஷிப்பைக் கூட செய்கிறார்கள். அதனால்தான் ரோஹித்துக்கு கூடுதல் டிக் (மார்க்) உள்ளது. ஏனெனில் அவர் முழு அணியையும் மகிழ்ச்சியாக வைத்திருக்கிறார்” என்று கபில் தேவ் கூறினார்.

 

The post ரோஹித் ஷர்மாவுக்கு தனது வரம்புகள் தெரியும், அந்த வரம்புகளுக்குள், அவரை விட சிறந்த வீரர் இல்லை: கபில் தேவ் appeared first on Dinakaran.

Related Stories: