முதல் அரையிறுதியில் நாளை காலை தென்ஆப்ரிக்காவுடன் ஆப்கானிஸ்தான் மோதல்: முதன்முறையாக பைனலுக்குள் நுழையப்போவது யார்?

டரூபா: 9வது ஐசிசி டி.20 உலககோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்று முடிவில் குரூப் 1 பிரிவில்முதல் 2 இடம் பிடித்த இந்தியா, ஆப்கானிஸ்தான், குரூப் 2 பிரிவில் இருந்து தென்ஆப்ரிக்கா, இங்கிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றன. அரையிறுதி போட்டிகள் நாளை நடக்கிறது. இந்திய நேரப்படி நாளை காலை 6 மணிக்கு டரூபா பிரையன் லாரா ஸ்டேடியத்தில் தொடங்கி நடைபெறும் முதல் அரையிறுதி போட்டியில் தென்ஆப்ரிக்கா- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதுகின்றன.

மார்க்ரம் தலைமையிலான தென்ஆப்ரிக்கா இந்ததொடரில் தோல்வியையே சந்திக்காமல் தொடர்ச்சியாக 7 வெற்றிகளை பெ்ற்று அரையிறுதிக்குள் நுழைந்துள்ளது. பேட்டிங்கில் டிகாக் 199,டேவிட் மில்லர் 148, கிளாசென் 138, டிரிஸ்டன் ஸ்டப்ஸ் 134 ரன் அடித்துள்ளனர். பவுலிங்கில் அன்ரிச் நார்ட்ஜே,11, ரபாடா 10 விக்கெட் எடுத்துள்ளனர். சுழலில் கேசவ் மகராஜ், (9), தப்ரைஸ் ஷம்சி(8) எதிரணிக்கு நெருக்கடி அளிப்பவர். மறுபுறம் ஆப்கானிஸ்தான் லீக் சுற்றில் உகான்டா, நியூசிலாந்து, நியூகினியா ஆகிய அணிகளையும், சூப்பர் 8 சுற்றில் ஆஸ்திரேலியா, வங்கதேசத்தையும் வீழ்த்தி முதன்முறையாக அரையிறுதிக்குள் வந்துள்ளது. பேட்டிங்கில் ரஹ்மானுல்லா குர்பாஸ் 281 ரன் எடுத்து முதலிடத்தில் உள்ளார். மற்றொரு தொடக்க வீரர் இப்ராஹிம் சத்ரான் 229 ரன் அடித்து 3வது இடத்தில் உள்ளர்.

மிடில் ஆர்டர் தான் சொதப்பலாக உள்ளது. பவுலிங்கில் ஃபசல்ஹக் ஃபரூக்கி 7 போட்டியில் 16 விக்கெட் வீ்ழ்த்தி டாப்பில் இருக்கிறார். கேப்டன் ரஷித்கான் 14 விக்கெட்எடுத்துள்ளதுடன் பேட்டிங்கில் கடைசி நேரத்தில் அதிரடியாக ஆடி கவனம் ஈர்க்கிறார். இவர்களை தவிர நவீன் உல்ஹக் தனது பங்கிற்கு 13 விக்கெட் எடுத்துக்கிறார். பேட்டிங்கை விட பவுலிங் தான் வலுவாக உள்ளது. தென்ஆப்ரிக்காவுக்கும் அதிர்ச்சி கொடுக்க ஆப்கன் தயாராகி வருகிறது. இரு அணிகளும் முதன்முறையாக இறுதி போட்டிக்கு நுழைய போராடும் என்பதால் ஆட்டத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.

The post முதல் அரையிறுதியில் நாளை காலை தென்ஆப்ரிக்காவுடன் ஆப்கானிஸ்தான் மோதல்: முதன்முறையாக பைனலுக்குள் நுழையப்போவது யார்? appeared first on Dinakaran.

Related Stories: