ஒமிக்ரான் பரவல் எதிரொலி; கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நாளை முதல் ஜனவரி 2 வரை தடை..! ஒடிசா அரசு அறிவிப்பு

ஒடிசா: ஒடிசாவில் ஒமிக்ரான் பரவல் காரணமாக கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு நாளை முதல் ஜனவரி 2 வரை புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. ஹோட்டல், க்ளப்புகள், பேரணிகள், இசைக்குழுக்கள் போன்றவற்றில் கொண்டாட ஒடிசா மாநிலத்தில் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 358 ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 122 பேருக்கு ஒமிக்ரான் பாதிப்புகள் பதிவாகியுள்ளன. 17 மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ள ஒமிக்ரான்,  அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 88 பேருக்கு உறுதி செய்யபப்பட்டுள்ளது.  

இதேபோல் டெல்லியில் 67 பேருக்கும்,  தெலங்கானாவில் 38 பேருக்கும், தமிழகத்தில் 34 பேருக்கும், கர்நாடகாவில் 31 பேருக்கும் ஒமிக்ரான் தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த இரவு நேர ஊரடங்கை அமல்படுத்த வேண்டும் என்றும்,  கட்டுப்பாடுகள் மற்றும் கண்காணிப்பை தீவிரப் படுத்த வேண்டும்  என்றும் மத்திய சுகாதாரத்துறை அனைத்து மாநிலங்களுக்கும் அறிவுறுத்தியுள்ளது. இதனையடுத்து இதுவரை ஒரு ஒமிக்ரான் தொற்று கூட பதிவாகாத மத்திய பிரதேசம் முதலாவதாக இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியது.  

அதனைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசம் மாநிலமும் இரவு நேர ஊரடங்கை அமல்படுத்தியிருக்கிறது.  மேலும் திருமணங்களில் 200 பேர் மட்டுமே  பங்கேற்க வேண்டும் என்று கட்டுப்பாடு விதித்துள்ளது. இந்நிலையில் தற்போது ஒமிக்ரான் பரவலைக் கட்டுப்படுத்த  ஒடிசாவில்  நாளை முதல் ஜன.2 வரை கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.  உலகம்  முழுவதும் நாளை கிறிஸ்துமஸ் கொண்டாடப்பட இருக்கும் நிலையில்  ஹோட்டல்கள், கேளிக்கை விடுதிகள், பேரணிகள், இசைக்குழுகள் போன்ற கொண்டாடங்களுக்கு  மாநிலம் முழுவதும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: