பூம்பூம் மாடுகளுடன் வந்து ஜாதி சான்றிதழ் கேட்டு கள்ளக்குறிச்சி கோட்டாட்சியரிடம் மனு அளித்த இந்து பழங்குடியின மக்கள்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் கீரனூர் கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட ஆதியின் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அவர்களுக்கு அக்கிராமத்தில் வசிப்பதற்காக ஆதாரமாக குடும்ப அட்டை, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றை பெற்றுள்ளனர்.  இந்த நிலையில் தங்களின் பிள்ளைகள் பள்ளிப்படிப்பை தொடர்வதற்காக தங்களுக்கு இந்து ஆதியன் என்ற பழங்குடியினர் ஜாதி சான்றிதழ் வழங்க கோரி இன்று சுமார் 300க்கும் மேற்பட்டோர் பூம்பூம்மாடுகளுடன் கள்ளக்குறிச்சி வருவாய் கோட்டாட்சியர் சரவணன் அவர்களிடம் மனு அளித்தனர். 

Related Stories: