அதிமுகவை மீட்பதே எங்கள் இலக்கு: டிடிவி தினகரன் பேட்டி

திருச்சி: அதிமுகவை மீட்பதே எங்கள் இலக்கு என டிடிவி தினகரன் கூறினார். திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலில் அமமுக பொது செயலாளர் டி.டி.வி தினகரன் குடும்பத்தினருடன் நேற்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: அதிமுகவில் நடப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது. தற்போது அதிமுக, குரங்கு கையில் கிடைத்த பூ மாலை போல் உள்ளது. சசிகலா தன்னை அதிமுக பொதுச்செயலாளர் என நீதிமன்றத்தில் கூறுகிறார். அவரை அதிமுகவில் இணைக்க மாட்டோம் என்கிறார்கள். அது அவர்களின் பிரச்னை. அது தொடர்பாக அமமுக கருத்து கூற முடியாது. அதிமுகவை மீட்பதே எங்கள் இலக்கு. அதை நோக்கியே நாங்கள் சென்று கொண்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

More