நூல் விலை உயர்வுக்கு எதிராக திருப்பூரில் பின்னலாடை நிறுவனங்கள் முழு அடைப்பு போராட்டம்; ரூ.200 கோடி வர்த்தகம் பாதிப்பு.!

திருப்பூர்; நூல் விலை உயர்வுக்கு எதிராக திருப்பூரில் இன்று பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த நிறுவனங்கள் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளன. ஐந்து லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் 200 கோடி ரூபாய் வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பின்னலாடைகளில் 70 சதவீதத்துக்கும் அதிகமாக திருப்பூரிலிருந்து உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன.

கடந்த சில மாதங்களாக பின்னலாடை உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளான நூல் விலை கடுமையாக உயர்ந்து வரக் கூடிய சூழ்நிலையில் கடந்த ஒரு வருடத்தில் மட்டும் 120 முதல் 150 வரை விலை உயர்த்தப்பட்டு 300 முதல் 350 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இதன் காரணமாக பின்னலாடை தொழில் பெரும் நஷ்டத்தை சந்தித்து வரக் கூடிய சூழ்நிலையில் நூல் விலை உயர்வை கட்டுப்படுத்த தொழில்துறையினர் மத்திய அரசுக்கு பலமுறை வலியுறுத்தியும் எந்த வித நடவடிக்கையும் எடுக்காத காரணத்தால் இன்றைய தினம் கோரிக்கைகளை வலியுறுத்தி பின்னலாடை மற்றும் அதனை சார்ந்த 117 அமைப்புகள் முழு அடைப்பு போராட்டம் அறிவித்து இருந்தன.

இதன் காரணமாக இன்று திருப்பூர் மாவட்டத்தில் பின்னலாடை மற்றும் அது சார்ந்த லட்சக்கணக்கான நிறுவனங்கள் அடைக்கப்பட்டுள்ளன மேலும் கோரிக்கைகளை வலியுறுத்தி மாநகராட்சி அலுவலகம் எதிரே உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த முழு அடைப்பு போராட்டத்தில் 5 லட்சத்திற்கும் அதிகமான தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர் இதன் காரணமாக 200 கோடிக்கு மேல் வர்த்தக பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Related Stories: